முதல் இரண்டரை மணி நேரத்தில் 4 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு!

முதல் இரண்டரை மணி நேரத்தில் 4 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மே-31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தற்போது 4-ஆம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனையடுத்து, கொரோனா ஊரடங்கிற்கு பின் நாடு முழுவதும், ஜூன்-1ம் தேதி முதல் 200 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், அதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு, முன்பதிவு இன்று தொடங்கியது. 

அதன்படி முதல் இரண்டரை மணி நேரத்திற்குள் கிட்டத்தட்ட 4 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.