குஜராத் மாநிலத்தில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு!

அகமதாபாத்தில் உள்ள ஒரு ஜவுளி ஆலையில் கழிவு தொட்டியை சுத்தம் செய்யும்போது ஏற்பட்ட விஷவாயுவை சுவாசித்தால், 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலம், அகமதாபாத் மாவட்டத்தில் சிரிபால் குடும்பத்திற்கு சொந்தமான “விஷால் பேப்ரிக்ஸ்” எனும் அருகே ஒரு ஜவுளி தொழிற்சாலையில் ரசாயன கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட நான்கு தொழிலாளர்கள், கழிவு தொட்டியின் உள்ளே விஷ வாயுவை சுவாசித்ததால், மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து அம்மாவட்ட டி.எஸ்.பி. நிதேஷ் பாண்டே   கூறுகையில், இரசாயன கழிவு தொட்டியின் உள்ளே விஷ வாயுவை சுவாசித்ததில் தொழிலாளர்கள் நான்கு உயிரிழந்ததாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ரசாயன கழிவுத் தொட்டியை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி, சுயாதீன சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு அகமதாபாத் நகரில் சிரிபால் குழுவைச் சேர்ந்த மற்றொரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.