38 கிலோ மீட்டர் தூரத்தில் தாக்கக்கூடிய வகையில் தனுஷ் பீரங்கி சோதனை..!

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன தனுஷ் பீரங்கியின் சோதனை, அடுத்த வாரம் நடைபெறுகிறது.

ஸ்வீடன் நாட்டை சோந்த போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகள் வாங்கியதில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, அதே தொழில்நுட்பத்தில் தனுஷ் என்ற பெயரில் உள்நாட்டிலேயே பீரங்கிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

முதல்முறையாக 38 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய வகையில் தனுஷ் ரக பீரங்கி, மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள துப்பாக்கி கேரேஜ் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் உள்ள போக்ரான் பகுதியில் அடுத்தவாரம் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட, தனுஷ் பீரங்கி சோதனை தோல்வியடைந்ததை தொடர்ந்து, தற்போது மேம்படுத்தப்பட்ட தொழிநுட்பத்தில் தயாரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment