மொத்தம் எத்தனை ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியருக்கான தமிழக அரசு விருதுகள்?!

நாளை செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியா முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

By manikandan | Published: Sep 04, 2019 11:43 AM

நாளை செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியா முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் 2வது குடியரசு தலைவராக இருந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். கல்வியாளரும், தத்தத்துவவியலாளருமான இவரது பிறந்த நாளைத்தான் 1962 முதல் ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். இந்த ஆசிரியர் தினத்தின் போது சிறந்த ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு விழா நாளை மதியம் 2 மணி அளவில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து இந்த விருது விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் பாடநூல் கழக தலைவர் வளர்மதி மற்றும் பல கல்வியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் அரசு தொடக்க பள்ளி ஆசிரியர்கள் 165 பேருக்கும், அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள் 165 பேருக்கும், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் 32 பேருக்கும், மாற்று திறனாளி ஆசிரியர்கள் 3 பேருக்கும், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன கல்வி நிறுவன பேராசியர்கள் 10 பேருக்கும் என மொத்தமாக 377 ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட உள்ளது.
Step2: Place in ads Display sections

unicc