ஐசிஐசிஐ வங்கியின் லாபம் 30 சதவீதம் குறைந்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு முடிவில்  30 சதவீதமாக சரிந்துள்ளது இந்த லாபம் ரூபாய்.2,071 கோடியாக உள்ளது. வாராக்கடன் அதிகரித்ததன் காரணமாக  செப்டம்பர் காலாண்டில் நிகர லாபம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே காலாண்டில் ஐசிஐசிஐ வங்கியின் நிகர லாபம் கடந்த நிதியாண்டில்  2,979 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடப்பு காலாண்டில்  ஜுலை முதல் செப்டம்பர் மாதம் வரை  ஐசிஐசிஐ வங்கியின் மொத்த வருமானம் ரூபாய்.30,191 கோடியாக சரிவு ஏற்பட்டுள்ளது. இதே காலாண்டில் கடந்த நிதியாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூபாய் 32,435 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், நிகர வட்டி வருமானம் 9 சதவீதம் அதிகரித்து ரூபாய் 5,709 கோடியாக இருக்கிறது. முந்தையை நிதியாண்டில் இதே வருமானம் ருபாய் 5,253 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐசிஐசிஐ வங்கியுடைய மொத்த வாராகடன் இந்த இரண்டாவது காலாண்டில்  7.87 அதிகமாகியுள்ளது. அதேமாதிரி நிகர வாராகடன் 4.43 சதவீதமாக அதிகரித்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment