300 ரன் குவிக்க காரணமான மும்மூர்த்திகள்..!அதிரடி காட்டிய தவான்..ராகுல்..கோலி..!எகிறிய ரன் ஸ்கோர்.!

300 ரன் குவிக்க காரணமான மும்மூர்த்திகள்..!அதிரடி காட்டிய தவான்..ராகுல்..கோலி..!எகிறிய ரன் ஸ்கோர்.!

  • இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2 வது ஒருநாள் போட்டி இந்தியா 340 ரன்கள் குவிப்பு ,ஆஸ்திரேலியா.,வெற்றி இலக்கை துரத்தி விளையாடி வருகிறது.
  • இன்று கோலி-ஷிகர் தவான்,ராகுல் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.முதல் ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தோற்றதால் வீராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காரணம் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டது.வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றி இந்திய அணிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இன்றைய போட்டியில் தன் முழு ஆட்டத்தை காட்ட ஆஸ்திரேலியாவும் களம் இறங்கியது.

Image

இந்நிலையில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.இதனால் பேட்டிங்க் செய்ய களமிரங்கிற இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6  விக்கெட் இழப்பிற்கு 340 ரன் களை குவித்து உள்ளது.

Image

இதனால் 341 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆஸ்திரேலியா களமிரங்கி விளையாடி வருகிறது.

Image

இன்றைய ஆட்டத்தில் அதிரடி ரன் வேட்டையில் ஈடுபட்ட வீரர்கள் பற்றி அறிந்து கொள்வோம் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா ஜோடி சிறப்பான ஒரு துவக்கம் கொடுத்தது. இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்து இருந்த சமயத்தில் ரோகித் சர்மா (42)  ரன்னில் அவுட் ஆனார்.

Image

 

மறுபக்கம் சுதாரித்து விளையாடிய ஷிகர் தவான் ஒருநாள் அரங்கில் தனது 29 வது அரைசதம் அடித்து அசத்தினார் தொடர்ந்து விளையாடிய தவான் சதம் அடிக்க 4 ரன் கள் தேவைப்பட்ட நிலையில் 96 ரன்னுக்கு அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து மைதானத்தை விட்டு நகர்ந்தார்.அடுத்து களமிரங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் கோலியுடன் கைகோர்த்து 7 ரன் எடுத்த நிலையில் கேப்டன் கோஹ்லி 78 ரன்னில் ஆவுட்டாகி கிளம்பினார்.

Image

அடுத்து வந்த மணிஷ் பாண்டேவும் (2) வந்த வேகத்தில் வெளியேறிவே கவனம் முழுவதும் ராகுலின் மீது பாய்ந்தது இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லோகேஷ் ராகுல் தனது 38வது பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார் தொடர்ந்து ஆடிய அவர் 80 ரன்னில் அவுட்டானார்.

Image

இதனால் இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 340 ரன்கள் குவித்தது. மேலும் களத்தில் ஜடேஜா (20) ரன்னிலும், முகமது ஷமி (1)  ரன்னிலும் இருந்தனர்.

author avatar
kavitha
Join our channel google news Youtube