வங்கியில் நுழைந்த 3 அடி நல்ல பாம்பு..! தெறித்து ஓடிய வாடிக்கையாளர்கள்..!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள ஒரு ஸ்டேட் பாங்க் வங்கியில் நேற்று

By murugan | Published: Nov 20, 2019 07:07 AM

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள ஒரு ஸ்டேட் பாங்க் வங்கியில் நேற்று வழக்கம்போல செயல்பட்டுக்கொண்டிருந்தது.பிற்பகல் 12 மணி அளவில் வாடிக்கையாளர் கூட்டம் அதிகளவில் இருந்தது. அப்போது வங்கி வாசலில் இருந்த நீர் தொட்டியில் இருந்து சுமார் 3 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஓன்று வங்கி உள்ளே நுழைந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர்.வங்கி அதிகாரிகளும் பீதியடைந்தனர். இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்களுக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நல்லபாம்பை அரை மணி நேரம் போராடி உயிருடன் பிடித்தனர். பிடித்த நல்ல பாம்பை வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர். பாம்பு வங்கிக்குள் நுழைந்தால் தான் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Step2: Place in ads Display sections

unicc