தீபாவளி ஸ்பெஷல்! இரண்டு நாள் விடுமுறை கட்டாயம்! மூன்றாம் நாள் அனுமதி பெற்று விடுமுறை அறிவிக்கலாம்!

இந்த வருட தீபாவளி ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் மட்டும் விடுமுறை என ஏற்கனவே பள்ளிக்கல்வி துறை அறிவித்து இருந்தது. இதற்கு பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.
இதனை அடுத்து, தற்போது, தீபாவளியை முன்னிட்டு, அதற்க்கு முந்தைய நாள் சனிக்கிழமை விடுமுறை எனவும், தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள் கிழமை, வேண்டுமென்றால் பள்ளி நிர்வாகம், அந்ததந்த மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் அனுமதி பெற்று உள்ளூர் விடுமுறையாக அறிவித்து கொள்ளலாம் என தற்போது பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.