ஐநாவில் காஷ்மீர் பிரச்சனை குறித்து கூட்டம் துவங்கியது உற்று நோக்கும் உலக நாடுகள்

காஷ்மீரின் சிறப்பு சட்டம் அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டம் நடைபெற்று வருகிறது .ஐநாவில் 5 நிரந்தர உறுப்பினர்கள் 10 உறுப்பு நாடுகள் உட்பட 15 நாடுகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளது .

இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று பாக்கிஸ்தான் ஐநாவில் கடிதம் அளித்துள்ளது அதுமட்டுமில்லாமல்  சீனாவும் காஷ்மீர் பிரச்னை குறித்து  விசாரிக்க வேண்டும் என முறையிட்டது .இதில் சீனா நிரந்தர உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை ஏற்ற  ஐநா பாதுகாப்பு கவுன்சில்,நியூ யார்க்கில் இன்று ஒரு மூடப்பட்ட அறைக்குள் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .

இந்த கூட்டம் நடைபெற்ற பின்னர் ரஷ்யாவின்  ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கான ரஷ்ய உறுப்பினர் டிமிட்ரி போலியான்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பிரச்சனை குறித்தும் இதில் என்ன முடிவுகள் எடுக்கப்படும் என்று உலக நாடுகள் உற்று நோக்கி வருகிறது .

 

author avatar
Dinasuvadu desk