2,95,00,000 பேர்…. வேலைதேடி..அவலத்தில் இந்தியா…பகிர் தகவல்…!!

கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவு நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
இந்திய பொருளாதார சூழலை ஆய்வு செய்யும் சி எம் ஐ இ (CMIE) என்ற  பொருளாதார கண்காணிப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் அக்டோபர் மாதத்தில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை 6.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு அக்டோபரில், மக்கள் தொகையில் 42.8 சதவீதத்தினர் மட்டுமே வேலை செய்ய தயாராக இருப்பதாக சி எம் ஐ இ   கண்டுபிடித்து உள்ளது.  கடந்த 2 ஆண்டுகளில் அதாவது, பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு உழைக்கத் தயாராக இருப்பவர்களின் விகிதமானது, குறைந்துள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பணமதிபிழப்பு நடைபெறுவதற்கு  வெற்றிபெறுவதற்கு முன்னர், தொழிலாளர் பங்களிப்பு 47 சதவீதம் முதல் 48 சதவிகிதத்தில் இருந்தது, ஆனால் அதற்குப் பிறகு, இது வீழ்ச்சியடைந்து உள்ளதாக ஆய்வின் படி குறிப்பிடுகிறது.
வருவாயை உருவாக்குவதற்கு முறையான அல்லது முறையற்ற வழியில் வேலை செய்யும் மொத்த வயதுவந்தோரின் அளவு, வேலைவாய்ப்பு விகிதத்தை பொறுத்தவரை, 39.5 சதவீதத்தினர் மட்டுமே.
கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 39.7 கோடியாக  இருந்த நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 40.7 கோடி  அதிகரித்து உள்ளது. அதாவது வேலைவாய்ப்பின்மை 2.4 சதவீதம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.2017-ஆம் ஆண்டு வேலை தேடுவோரின் எண்ணிக்கை 2.16 கோடியாக  இருந்தது, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2.95 கோடியாக அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் 1.2 கோடி  மக்கள் தொழிலாளர்களாக மாறுகின்றனர். ஆனால் அதற்கு ஏற்றவாறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை என்பதாலேயே வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கிறது.
dinasuvadu.com
author avatar
Dinasuvadu desk

Leave a Comment