சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 29% ஊதிய உயர்வு இன்று முதல் அமல் -அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

20 ஆயிரம் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 29% ஊதிய உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படும்

By venu | Published: Jul 12, 2019 06:02 AM

20 ஆயிரம் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 29% ஊதிய உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படும் என்று பேரவையில்  உணவுத்துறை  அமைச்சர் காமராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக உணவுத்துறை  அமைச்சர் காமராஜர் வெளியிட்ட அறிவிப்பில்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்   20 ஆயிரம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இவர்களுக்கு இன்று  முதல் 29% ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்.மேலும் ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ரூ  காப்பீடு வழங்கப்படும். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியம் மாற்றி அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார் உணவுத்துறை  அமைச்சர் காமராஜர்.  
Step2: Place in ads Display sections

unicc