முதல்வர் ஏன் ஆளுநரை உடனே சந்திக்கக் கூடாது? திருமாவளவன்

முதல்வர் ஏன் ஆளுநரை உடனே சந்திக்கக் கூடாது? திருமாவளவன்

முதல்வர் ஏன் ஆளுநரை உடனே சந்திக்கக் கூடாது? என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மருத்துவ இடங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டத்தை 2020-2021 ஆம் கல்வி ஆண்டிலே அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் , உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.அதில்,மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்னுமும் ஆளுநர் பரிசீலனையில் உள்ளது. ஆளுநருக்கு காலகெடுவோ, ஒப்புதல் அளிக்க உத்தரவோ நீதிமன்றத்தால் அளிக்க முடியாது.7.5% இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் மருத்துவ கல்லூரிகளில் கலந்தாய்வு சம்பந்தமான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,அரசுப் பள்ளி மாணவர்களுக்காக மாண்புமிகு முதல்வர் அவர்கள், ஏன் மேதகு ஆளுநர் அவர்களை உடனே சந்திக்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.காலம் தாழ்த்தாமல் முதல்வர் அவர்கள், மேதகு ஆளுநர் அவர்களை உடனடியாகச் சந்திக்க வேண்டுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube