ரெயிலில் உணவு சாப்பிட்ட 26 பயணிகளுக்கு வாந்தி, மயக்கம்

ரயிலில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட பலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

கோவாவிலிருந்து மும்பைக்கு சென்ற தேஜாஸ் எக்ஸ்பிரஸில் பயணம் செய்த பயணிகளுக்கு  ரெயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி) காண்டிராக்டர் மூலம் சைவம் மற்றும் அசைவ சிற்றுண்டி கொடுக்கப்பட்டது

சாப்பிட்ட சிலருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. சுமார் 26 பயணிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட 26 பயணிகளும் மும்பையில் இருந்து 260 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிபுலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 3 பேர் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஐ.ஆர்.சி.டி.சியின் பகுதி அலுவலர் மற்றும் கேட்டரிங் மேனஜர் ஆகிய இருவரை இடை நீக்கம் செய்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment