நாடு முழுவதும் 261 ரயில்களின் வேகம் அதிகரிப்பு ! பயண நேரம் 1 மணிநேரம் 50 நிமிடம் குறைப்பு !

இந்திய ரயில்வே சார்பில் ஜூலை 1- ம் தேதி ரயில்வே புதிய  அட்டவணை மாற்றுவது வழக்கம்.  இந்த அட்டவணையில் மாற்றம் செய்ய “மிஷின் ரப்தார் “என்ற திட்டம் 2016-17 ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதன் அடிப்படையில் சரக்கு ரயில்களின் வேகம் இரண்டு மடங்குகளாகவும், பயணிகள் பயணிக்கும் ரயில்களின் வேகம் 25 கி.மீ வேகமும் 5 ஆண்டுகளுக்குள் அதிகரிக்கப்பட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான புதிய  ரயில்வே அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. அதில் பல ரயில்களின் புறப்படும் நேரங்கள் மாற்றப்பட்டது.மேலும் புதிய ரயில்களையும் அறிவித்து உள்ளனர்.

இந்த புதிய ரயில்வே அட்டவணையில் இந்திய ரயில்வேயில் உள்ள 17 ரயில்வே மண்டலங்களில் 261 ரயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.இதனால் பயண நேரம் 1 மணிநேரம் 50 நிமிடம் குறையும்.மேலும் 49 ரயில்கள் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டு  உள்ளது.

இந்த புதிய ரயில்வே அட்டவணையில் ஒரு வந்தே பாரத் மற்றும் உதே எக்ஸ்பிரஸ் ரயில்களும், 34 ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரயில்களும் , 11 அந்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில்களும் , 2 தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களும்  அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

author avatar
murugan