26 மாவட்ட முடிவுகள் அறிவிப்பு :அதிக வெற்றி திமுகவிற்கா ? அதிமுகவிற்கா?

26 மாவட்ட முடிவுகள் அறிவிப்பு :அதிக வெற்றி திமுகவிற்கா ? அதிமுகவிற்கா?

  • மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது.  
  • அதிமுக கூட்டணி 14 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும், திமுக 12 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும் கைப்பற்றியுள்ளது.
இன்று தமிழகத்தில்  உள்ள 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகள் மற்றும் 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கு  மறைமுக தேர்தல் நடைபெற்றது.ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள  26 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் ,அதிமுக கூட்டணி 14 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும், திமுக 12 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும் கைப்பற்றியுள்ளது. அதிமுக கைப்பற்றியுள்ள பகுதிகள்: தூத்துக்குடி,கன்னியாகுமரி,ஈரோடு,அரியலூர்,திருப்பூர்,விருதுநகர்,தேனி,கோவை,நாமக்கல், தருமபுரி,கரூர்,புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாமக சேலம் மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. திமுக கைப்பற்றியுள்ள பகுதிகள் :  தஞ்சாவூர்,மதுரை,ராமநாதபுரம்,திருவாரூர், நீலகிரி,திருவள்ளூர், திண்டுக்கல்,திருவண்ணாமலை,நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி ,திருச்சி,பெரம்பலூர் ஆகிய 12 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை  கைப்பற்றியுள்ளது.  

Latest Posts

#Breaking : மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
உமர் காலித்தை அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!
நவ.1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் - எந்த விடுமுறையும் கிடையாது!
அபுதாபியில் அக்டோபர் 1 புதிய போக்குவரத்து விதிமுறைகள்.!
ரஃபேல் விமானத்தின் முதல் பெண் விமானி சிவாங்கி சிங்..!
#Breaking: அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி
உத்தரபிரதேசத்தில் "கோவாக்சின்" தடுப்பூசியின் 3 கட்ட சோதனை தொடக்கம்.!
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் வருங்கால கணவரை பார்த்தீர்களா..?
இரண்டாவது தடுப்பூசி விரைவில் பதிவு செய்யப்படும்..புதின்.!
ஆன்லைன் வகுப்புகளை நடத்த அங்கீகாரம்: அக்.15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - யுஜிசி