தமிழகத்தில் ரூ.5.72 கோடியில் 25 புதிய தொடக்க பள்ளிகள் தொடங்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் 25 புதிய தொடக்க பள்ளிகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி

By venu | Published: Mar 13, 2020 04:35 PM

தமிழகத்தில் 25 புதிய தொடக்க பள்ளிகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.அதன்படி இன்று நடைபெற்ற பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவிப்புகளை அறிவித்தார்.அவரது அறிவிப்பில், வரும் கல்வி ஆண்டில், ரூ.5.72 கோடியில் 25 புதிய அரசு தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும். மேலும், 10 அரசு தொடக்கப் பள்ளிகள் ரூ.3.90 கோடியில் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். 

 

Step2: Place in ads Display sections

unicc