4 ஆண்டுகளில் 23 அறுவை சிகிச்சைகள்! பிரபல நடிகர் ஓபன் டாக்!

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் திரைப்படம் தெலுங்கில், மிஸ்டர் கே கே என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது. இதனையடுத்து ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் விக்ரம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், சேது படத்தில் நடித்த போது, அவரை மெலிய வேண்டும் என சொன்னார்களாம் அதற்காக அவர் கடுமையாக முயற்சி எடுத்தாராம். அவரது கல்லூரி நாட்களில் அவரது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, விபத்தில் சிக்கியதில், அவருக்கு நான்கு ஆண்டுகளில், 23 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றதாம்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், எனது வாழ்க்கையை சேதுவுக்கு முன்னால், சேதுவுக்கு பின்னால் என பிரிக்கலாம். ஏனென்றால் சேதுவுக்கு முன்னால் எனது படங்கள் நன்றாக ஓடவில்லை என்றும், சேது தோற்றால் சினிமாவை விட்டு விலகிவிட முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால், சேது படம் கொடுத்த வெற்றியால், இன்னும் நான் உற்சாகமாக ஓடிக்கொண்டே இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.