9 நிமிடங்களில் 2,200 மெகாவாட் மின்சாரம் குறைந்தது – அமைச்சர் தங்கமணி

9 நிமிடங்களில் 2,200 மெகாவாட் மின்சாரம் குறைந்தது – அமைச்சர் தங்கமணி

கொரோனா வைரசுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதை வெளிப்படுத்தும் விதத்தில் பிரதமர் மோடியின் வலியுறுத்தல்படி, நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் அனைவரும் நேற்று சரியாக இரவு 9 மணி அளவில் 9 நிமிடங்கள் வீட்டு மின்விளக்குகளை அணைத்துவிட்டு, விளக்குகளை ஏற்றினர். தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் இதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மின்வாரியம் மேற்கொண்டிருந்தது. அதாவது குறிப்பிட்ட நேர இடைவெளியில் 1,200 மெகாவாட் மின்சாரம் குறையும் என எதிா்பாா்த்திருந்தோம். ஆனால் 2,200 மெகாவாட் மின்சாரம் குறைந்திருந்தது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா முழுவதும் 31 ஆயிரம் மெகாவாட், தென்னகப் பகுதியில் 6600 மெகாவாட் மின்சாரம் குறைந்தது. குறிப்பாக சென்னையில் மட்டும் 350 மெகாவாட் குறைந்திருந்தது. இதை சரி செய்யும் வகையில் எரிவாயு, நீா், அனல் ஆகியவற்றின் உற்பத்தியைக் குறைத்திருந்தோம். காற்றாலை மின்சாரமும் போதிய அளவில் கிடைத்தது. இதையடுத்து அனைவரும் மின் விளக்குகளை இயக்கிய சமயத்தில் தேவையான மின்சாரத்தை வழங்கி, எந்த வித சிக்கலும் இல்லாமல் தமிழகத்தில் மின் விநியோகம் செய்யப்பட்டதாக அமைச்சா் தங்கமணி தெரிவித்தாா்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube