“20 வது பிறந்தநாள் கொண்டாடுகிறது கூகுள் “

நாம் கேட்பவற்றை அள்ளி அள்ளி தரும் அச்சயபாத்திரம் போல..,இன்றைய கணினியுலக அச்சயபாத்திரமாய் திகழும் கூகுள் நாம் கேட்கும் பல கேள்விகள், சந்தேகங்கள் என அனைத்திற்கும் விடையளிக்கிறது.அந்த கணினி உலக தேடுதல் தளமான கூகுள் இன்றைக்கு 20-வது ஆண்டில் நுழைகிறது.

Image result for கூகுள்100 கோடிக்கு மேலான மக்கள் பயன்படுத்தக்கூடிய தேடுதல் தளமான கூகுள்,கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்த லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இரு மாணவர்களால் 1998-ம் ஆண்டு ஒரு கார் நிறுத்துமிடத்தில் தொடங்கப்பட்டு இன்று உலக மக்களின் இன்றியமையாத தேடுதல் தளமாக மாறியுள்ளது.

Image result for கூகுள்தேடுதளத்தில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் மென்பொருட்கள்,ஆன்லைன் விளம்பரம்,வன்பொருட்கள் என இணையத்தின் அனைத்து துறைகளிலும் பறந்து விரிந்திருக்கிறது.மாணவர்கள் மற்றும் இளஞர்கள் “Google is my guru” என்று அன்போடு சொல்லும் அளவிற்கு அசுர வளர்ச்சி பெற்று இருக்கிறது இந்நிறுவனம்.1 க்கு பின்நூறு பூஜ்யங்களைக் குறிக்கும் கூகால் என்ற கணித வார்த்தையைச் சார்ந்து கூகுள் என்ற பெயர் அந்த நிறுவனத்திற்கு சூட்டப்பட்டது.இதனை சிறப்பிக்கும் விதமாக சான்ஃபிரான்சிஸ்கோவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் 20-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment