அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2065 பேர் உயிரிழப்பு , புதிதாக 35,419 பேருக்கு தொற்று .!

அமெரிக்காவில் ,நேற்று ஒரே நாளில் 2065 பேர்  உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 54,265 ஆக உள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் தனது கொரோனா முகத்தை காட்டி வருகிறது.

உலகம் முழுவதும் 2,921,556 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 203,299 ஆக உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் 2065 பேர்  உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 54,265 ஆக உள்ளது.

அமெரிக்காவில், நேற்று ஒரே நாளில் புதிதாக 35,419 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 960,651  ஆக உயர்ந்துள்ளது.

author avatar
murugan