#2019 RECAP: நாங்குநேரி , விக்கிரவாண்டியில் நடைபெற்ற இடைத்தேர்தல்.!

#2019 RECAP: நாங்குநேரி , விக்கிரவாண்டியில் நடைபெற்ற இடைத்தேர்தல்.!

  • கடந்த அக்டோபர் 21-ம் தேதி  நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
  • இரண்டு தொகுதியிலும்  திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை வீழ்த்தி அதிமுக வேட்பாளர்கள் வெற்றி  பெற்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு இடைத்தேர்தல் என அறிவித்தார்.பின்னர் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்.

செப்டம்பர் மாதம் 23-ம் தேதி வேட்புமனு தாக்கல் எனவும் ,வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30-ம் தேதியும் , வேட்புமனு பரிசீலனை அக்டோபர் 01-ம் தேதியும், மனுக்களைத் திரும்பப் பெற அக்டோபர் 03-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதியும் நடைபெறும் என சுனில் அரோரா அறிவித்தார்.

இதை தொடர்ந்து கடந்த அக்டோபர் 21-ம் தேதி  நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இருதொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. பின்னர் வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதி நடைபெற்றது.

இந்த இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்ச் செல்வன் 44,924 வாக்குகள் வித்தியாசத்திலும், நாங்குநேரி தொகுதியில் நாராயணன் 33,445 வாக்குகள் வித்தியாசத்திலும் தங்களை எதிர்த்து போட்டியிட்ட முறையே திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை வீழ்த்தினர்.

 

author avatar
murugan
Join our channel google news Youtube