டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 (Apache RTR 200) ரேஸ் எடிசன் 2.0 அறிமுகம் .!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 (Apache RTR 200) ரேஸ் எடிசன் 2.0 அறிமுகம் .!

டிவிஎஸ்(TVS)  நிறுவனத்தின் அப்பாச்சி 200 (APACHE 200) பைக்கில், டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 ரேஸ் எடிசன் 2.0 மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன்  ரூ. 95,185 ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 35 ஆண்டுகால ரேசிங் பாரம்பரியத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள ஆன்ட்டி- ரிவர்ஸ் டார்க் ஸ்லிப்பர் கிளட்ச் (A-RT (anti-reverse torque) slipper clutch) மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்த ஆன்ட்டி- ரிவர்ஸ் டார்க் ஸ்லிப்பர் கிளட்ச் பெற்ற  முதல் பைக் மாடல் என்ற பெருமையும் டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி பைக் பெற்றிருக்கிறது. A-RT (anti-reverse torque) ஸ்லிப்பர் கிளட்ச் மிக சிறப்பான வகையில் குறைந்த உராய்வுடன் கியர்களை மாற்றுவதற்கு வழி வகுக்கும்.  இந்த கிளட்ச் முறை மிக விரைவாக கியரை கூட்டுவதற்கு பயன்படுவது போன்றே, கியரை குறைக்கும்போது பைக்கின் நிலைத்தன்மை பாதிக்கப்படாமல் இருக்கும். இந்த நுட்பத்தின் மூலமாக கியர் மாற்றம் மிக விரைவாகவும், 22 சதவீதம் உராய்வு குறைவாக இருக்கும் என்பதனால் சிறப்பான பந்தய கள அணுபவத்தினை வழங்கவல்லதாக விளங்குகின்றது.
அப்பாச்சி 200 பைக்கில் 20.5 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. மேலும் கார்புரேட்டர் என்ஜின் ஆகும். அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் உச்ச வேகம் மணிக்கு 128 கிமீ ஆகும். அப்பாச்சி 200 பைக்கில் 21PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. மேலும் இது  FI என்ஜின் ஆகும். இதன் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் உச்ச வேகம் மணிக்கு 129 கிமீ ஆகும். கார்புரேட்டர், ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் என இரு மாடல்களிலும் ஏபிஸ் மற்றும் ஏபிஎஸ் இல்லாத மாடல் என மொத்தம் மூன்று விதமான வேரியண்ட்களில் அப்பாச்சி 200 ரேஸ் எடிசன் விற்பனைக்கு வந்துள்ளது. முந்தைய மாடலை விட ரூ.6000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அப்பாச்சி 200 பைக் கார்புரேட்டர் ரூ. 95,185, அப்பாச்சி 200 பைக் EFI ரூ. 1,07,885 மற்றும் அப்பாச்சி 200 பைக்கி கார்புரேட்டர் உடன் ABS ரூ. 1,08,985 என்று தெரியவந்தது. மேலும் தகவல்களுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு. 2018 TVS Apache RTR 200 4V Race Edition 2.0 Launched.