2018 கர்நாடக தேர்தல்: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 72.13% வாக்குப்பதிவு!தேர்தல் ஆணையம்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 72.13% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.தேர்தல் ஆணையம் கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது; இதில் 30க்கும் மேற்பட்ட தமிழர்கள் உட்பட 2,622 பேர் போட்டியிட்டனர்.

இந்நிலையில்  தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில்,கர்நாடக மாநிலத்தில் நடந்து முந்த 222 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என தெரியவந்துள்ளது.

ஆனால், கர்நாடக மாநிலத்தில் யார் ஆட்சி அமைக்கலாம் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி இருக்கும் எனத் தெரியவந்துள்ளது.

மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவினாலும், தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்குமே தவிர பெரும்பான்மை கிடைக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் 15-ம் தேதி நடக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள 222 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் இன்று நடந்தது. 216 பெண் வேட்பாளர்கள் உள்ளிட்ட 2,654 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.காலையில் இருந்தே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். மாலைவரை 70 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் துணை ஆணையர் உமேஷ் சின்ஹா தெரிவித்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலில் 71.5 சதவீதம் வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக சிக்கபல்லபுரா, ராம்நகரா ஆகிய தொகுதிகளில் அதிகபட்சமாக 76 சதவீத வாக்கு பதிவாகி இருந்தது. பெங்களூரு நகரில் மிகக்குறைவாக 48 சதவீத வாக்குகள் பதிவானது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பல்வேறு செய்தி சேனல்கள் வெளியிட்டுள்ளன. 6 விதமான கருத்துக் கணிப்புகள் வெளியானதில் காங்கிரஸ் , பாஜக இடையே கடுமையான போட்டி நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏபிபி சி வோட்டர் கணிப்பின்படி பாஜகவுக்கு அதிகபட்சமாக 95 முதல் 114 இடங்கள் கிடைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு 87 முதல் 99 இடங்கள் வரை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 21 முதல் 30 இடங்கள் வரை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ்நவ் விஎம்ஆர் மற்றும் இந்தியா டுடே ஆக்சிஸ் ஆகியவை நடத்திய கருத்துக்கணிப்பில காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 112 இடங்களும், பாஜகவுக்கு 85 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 26 இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ்நவ் விஎம்ஆர் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 96 இடங்களும், பாஜகவுக்கு 86 இடங்களும், ஜேடிஎஸ் கட்சி 35 இடங்களிலும் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் டிவி, ஜான்கி பாத் நடத்திய ஆய்வில், பாஜவுக்கு 104 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 77 இடங்களும், ஜேடிஎஸ் 37 இடங்களும் கிடைக்கும் எனத் தெரியவந்துள்ளது.

நியூஸ்எக்ஸ், சிஎன்எக்ஸ் கணிப்பில் பாஜகவுக்கு 106 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 75 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 37 இடங்களும் கிடைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின் முடிவில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காது. மாநிலத்தில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் சக்தியா மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி உருவெடுக்கும், இதர கட்சிகள் 3 இடங்களில் வெற்றி பெறலாம் எனத் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment