2,000 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்.! நீர்மட்டம் 118.790 அடியாக குறைந்தது.!

  • இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.790 அடியாக குறைந்து உள்ளது.
  • அணையில் நீர் இருப்பு 91.55 டி.எம்.சி.யாகவும், நீர்வரத்து 2,114 கனஅடியாகவும் உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக அங்கு உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் நிறைந்தது.இதனால் மேட்டூர் அணைக்கு வரும்  நீர்வரத்தின் அளவு அதிகரித்தது. தொடர்ந்து வந்த நீர் வரத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

இதனை தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.790 அடியாக குறைந்து உள்ளது.

அணையில் நீர் இருப்பு 91.55 டி.எம்.சி.யாகவும், நீர்வரத்து 2,114 கனஅடியாகவும் உள்ளது. நீர்வரத்து குறைந்துள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து 2,000 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

author avatar
murugan