சென்னையில் 200 மாநகர பேருந்துகள் இயங்கப்படும் என அறிவிப்பு.!

சென்னையில் 200 மாநகர பேருந்துகள் இயங்கப்படும் என அறிவிப்பு.!

சென்னையில் ஏற்கனவே 175 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் 25 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்.

நாடு முழுவதும்கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில்  மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீர் மின்சாரம், தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அரசின் முக்கிய துறைகளை சார்ந்தவர்கள் பணிக்கு வருகின்ற வகையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 175 பேருந்துகள் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக  அறிவித்தார். மேலும் தலைமை செயலகம் மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் 50 சதவீத ஊழியர்கள் கொண்டு இயங்கலாம் என உத்தரவிட்டார். இதனால், ஏற்கனவே தலைமை செயலகத்திற்கு இயக்கப்பட்டு வந்த 25 பேருந்துகள் உடன் கூடுதலாக 25 பேருந்துகள் இன்றுமுதல் இயக்கப் படுகின்றன என மாநகர போக்குவரத்து கழகம் மேலாண்மை இயக்குனர் கணேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அத்தியாவசியம், அவசரப்பணி மற்றும் 50% அரசு ஊழியர்களுக்காக 200 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ள என மாநகர போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து பொதுமக்களுக்கு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube