மாணவியை வன்கொடுமை செய்த தலைமை ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறை.!

  • கேரளா மாநிலத்தில் உள்ள காசரகோடு மாவட்டத்தை சார்ந்தவர் ராஜன் நாயர்.இவர் சுள்ளக்காரா பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை செய்து வந்தார்.
  •   நான்காம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்ததற்காக தலைமை ஆசிரியருக்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது.

கேரளா மாநிலத்தில் உள்ள காசரகோடு மாவட்டத்தை சார்ந்தவர் ராஜன் நாயர்.இவர் சுள்ளக்காரா பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை செய்து வந்தார். அப்பள்ளியில் படிக்கும்  நான்காம் வகுப்பு மாணவியை கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வன்கொடுமை செய்தார்.

இதைத்தொடர்ந்து அக்டோபர் 11-ம் தேதி ராஜபுரம் போலீசார் அவர் ராஜன் நாயர் மீது வழக்கு பதிவு செய்தது. பின்னர் நடத்திய விசாரணையில் அந்த சிறுமியை பலமுறை வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையெடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ராஜன் நாயர் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்தது. இந்நிலையில் குழந்தைகள் மீதான குற்றங்களை விசாரிக்கும் போக்ஸோ நீதிமன்றம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தது. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் மாநில அரசு உத்தரவிட்டது. மாணவியை வன்கொடுமை செய்ததற்காக தலைமை ஆசிரியருக்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது.

author avatar
murugan