20 MM_க்கு பதில் 10 MM..ஒரே நாளில் ஜல்லி ஜல்லியாக பெயர்ந்த சாலை…அதிர்ச்சியில் மக்கள்..!!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட அச்சம் பட்டியிலிருந்து தண்டா வரை மூன்று கிலோ மீட்டர் சாலை 27 லட்சம் மதிப்பீட்டில் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது . டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் தார் சாலையை 20 mm க்கு பதிலாக தரமற்ற முறையில் நேற்று 10mm சாலை மட்டும் அமைத்துள்ளார். புதியதாக அமைக்கப்பட்ட தார்சாலை ஒரே நாளில் ஜல்லி ஜல்லியாக பெயர்ந்துள்ளது . சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது இருசக்கர வாகனத்தின் அழுத்தத்தை கூட தாங்காமல் சாலையில் இருந்து ஜல்லி கற்கள் தனித்தனியாக பெயர்ந்து விழுந்துள்ளது.
தரமற்ற வகையில் போடப்பட்ட சாலையில் பள்ளி சென்ற பள்ளி குழந்தைகள் சாலையில் உள்ள ஜல்லி கற்களை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி கிராம மக்கள் முறையான சாலை அமைக்க வேண்டி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். உடனடியாக தரமான புதிய சாலை அமைக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் பி என் பி இன்பசேகரன் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட தார் சாலையை பார்வையிட்டு அதிகாரிகளிடம் தார் சாலையின் உறுதித்தன்மை குறித்து கேட்டறிந்தார். அதிகாரிகள் தரமான சாலை அமைக்கப்படும் என்றும் சட்டமன்ற உறுப்பினருக்கு உறுதியளித்தனர் . இதனை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். புதிதாக அமைக்கப்பட்ட இந்த சார் தார்சாலை கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்ற உறுதிமொழி குழுவால் பூமி பூஜை செய்யப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் தார் சாலையை 20mm க்கு பதிலாக தரமற்ற முறையில் நேற்று 10mm சாலை மட்டும் அமைத்துள்ளார் என்று மக்கள் குற்றம் சாட்டினர்.
DINASUVADU 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment