பாண்டி பஜாரில் 20 லட்சம் கொள்ளை...போலீஸ் தீவிர விசாரணை விசாரணை...!!

By Fahad | Published: Mar 29 2020 02:53 AM

சென்னையில் உள்ள பாண்டி பஜாரில் வணிக வளாகத்தில் அலுவலக மற்றும் கடையில் ஒரு லட்சம் 20 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ள  பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பாண்டி பஜார் வணிக வளாகத்தில் முதல் தளத்தில் N.P.R என்ற வெளிநாட்டு பண பரிமாற்ற நிறுவனமும் தரைதளத்தில் பிரின்ஸ் கோல்டு கவரிங் மும்பை மேட்ச் சென்டர் என்ற கடையும் இருந்து வருகின்றது.இதில் வணிக வளாகத்தின் மாடி வழியாக நேற்று இரவு நுழைந்த கொள்ளையர்கள் பணபரிமாற்ற பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார்.

இதில் சுமார் 20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர்.இதனை தொடர்ந்து கொள்ளையர்கள் கோல்ட் கவரிங் கடையுள் நுழைந்து  போது அங்கே பணம் ஏதும் இல்லாத நிலையில் துணிக்கடையில் ஒரு லட்சம் ரூபாயும் பணத்தையும் , வெளிநாட்டு கடிகாரத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.கொள்ளையர்கள் தனது கைக்கடிகாரத்தை விட்டுச் சென்றுள்ள நிலையில் சிசிடிவி காட்சிகள் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.