நாட்டின் வளர்ச்சி,வேலைவாய்ப்பை அதிகரிக்க 2 புதிய கேபினட் குழு-பிரதமர் நரேந்திர மோடி

நடந்து முடிந்த 17-வது மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.இதனையடுத்து  நேற்று இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார்.அதில் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 58 அமைச்சர்கள் பதவியேற்றனர். அதில்  25 அமைச்சர்கள் , 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றனர்.பின்னர் இலாகாக்கள்  ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி  நாட்டின் வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்பை அதிகரிக்க 2 புதிய கேபினட் குழுக்களை அமைத்தார் .முதலீட்டிற்கான கேபினட் குழுவில் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, பியூஷ் கோயல் உள்ளனர்.வேலைவாய்ப்பு, திறன்மேம்பாட்டிற்கான கேபினட் குழுவில் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், நரேந்திரசிங் தோமர், ரமேஷ் பொக்ரியால், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோருக்கு இடம் பெற்றுள்ளனர்.