சிறப்பு பேருந்துகளில் 2 லட்சம் பேர்  பயணம் -அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கடந்த 2 நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 11 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்

By venu | Published: Jan 13, 2019 06:30 AM

கடந்த 2 நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 11 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  கூறுகையில்,  பொங்கலுக்கு சொந்த ஊர் செல்பவர்கள், சிரமமின்றி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வருகிறது.கடந்த 2 நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 11 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு , ரூ.18 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகளில் 2 லட்சம் பேர்  பயணம் செய்துள்ளனர் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc