திரைப்படம் போல 2 கோடி பட்ஜெட்டில் உருவாகும் வெப் சீரியல்!

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், பிரபலமான நடிகர்கள் மற்றும் நடிகைகள் வெப் சீரியலில்

By leena | Published: Oct 04, 2019 08:40 AM

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், பிரபலமான நடிகர்கள் மற்றும் நடிகைகள் வெப் சீரியலில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக திரைப்படங்களுக்கு செலவு செய்வது போல செலவு செய்து, வெப் சீரியலை இயக்குகின்றனர். இந்நிலையில், எம். குமரன் இயக்கத்தில் இருதுருவம் என்ற வெப் சீரியல் உருவாகியுள்ளது. இதில் நடிகை நந்தா மற்றும் பிக்பாஸ் அபிராமி ஆகியோர் நடிக்கின்றனர். இது குறித்து பேசிய நடிகை நாதா, 'திரைப்படம் போல 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள த்ரில்லர் கதை இது. சீரியல் கில்லர் ஒருவனை தேடி பிடிக்கும் காவல் துறை அதிகாரியாக இதில் நடிக்கிறேன்., என்று கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc