அமெரிக்காவில் 2.6 கோடி பேர் வேலையின்றி தவிப்பு.!

அமெரிக்காவில் வேலையில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 60 லட்சமாக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தனது கோர முகத்தை அமெரிக்கா, இத்தாலி , பிரான்ஸ் போன்ற நாடுகளில் காட்டி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் 8 லட்சத்திற்க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 50,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில், கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளது. இதையெடுத்து அமெரிக்காவில் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். வேலை இழந்ததால் அதற்கான உதவித்தொகை கேட்டு அரசிடம் பதிவு செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் 44 லட்சம் பேர் தங்களது வேலை இல்லை என பதிவுசெய்துள்ளன. இதனால் அங்கு வேலையில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 60 லட்சமாக உயர்ந்துள்ளது. இம்மாத இறுதிக்குள் மேலும், அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
murugan