2.0 படத்தின் டிக்கெட் வாங்கி ஏமாந்த சிம்பு ரசிகர்கள்….!!!

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்த நிலையில், தற்போது இந்த படத்திற்கு பாராட்டுக்களும், வரவேற்பும் குவிந்து வருகிறது.

இந்நிலையில், 2.0 படம் ரிலீஸ் ஆன இன்று, சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்தின் டீசரை வெளியிட லைகா நிறுவனம் திட்டமிட்டிருந்தது. திட்டமிட்டபடியே, சிம்பு படத்தின் டீசர் 2.0 படத்தின் இடைவேளையில் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து, சிம்பு ரசிகர்கள் டீசரை பார்ப்பதற்காகவே 2.0 படத்தின் டிக்கெட் வாங்கி சென்றுள்ளனர். ஆனால் படத்தின் இடைவேளையில் சிம்பு படத்தின் டீசர் வெளியிடப்படாததால் சிம்பு ரசிகர்கள் கடும்கோபத்திற்கு ஆளாகியுள்ளனர். டீசர் சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்படாததால் மிகவும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர் சிம்பு ரசிகர்கள்.

SOURCE : TAMIL.CINEBAR.IN

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment