“லூசிபர்” படத்தில் இடம் பெற்ற சண்டை காட்சியால் மிரண்டு புகார் கொடுத்த கேரளா போலீஸ்

“புகையிலை, மது அருந்துதல் தவறு என படத்தில் வருவது போல போலீசாரை தாக்குவது தவறு என்று படத்தில் இடம்பெற வேண்டும்” என அந்த புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

நடிகர் மோகன்லால் நடிப்பில் கேரளாவில் மாபெரும் வெற்றிப்படமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் “லூசிபர்”.இப்படத்தை பிருதிவிராஜ் இயக்கிய உள்ளார் .மேலும் இப்படத்தில் பிருதிவிராஜ்  ,மஞ்சுவாரியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்நடித்து உள்ளனர்.

“லூசிபர்” திரைப்படம்  கேரளாவில் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவர்ந்து உள்ளது.இந்நிலையில் இப்படத்தை தமிழ்நாட்டிலும் பல திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் மோகன்லால் ஒரு சண்டை காட்சிகளில் செருப்பு அணிந்த காலுடன் போலீஸ் அதிகாரியின் மார்பில் மிதிப்பதுபோன்ற காட்சி  இடம் பெற்றுள்ளது.

அந்த காட்சியை கேரளாவில் போஸ்டர் மூலம் சுவற்றில் ஒட்டி உள்ளனர். அதை கேரள போலீஸ் சங்கம் முதலமைச்சரிடம்  புகார் அளித்துள்ளது.
அந்த புகாரில்  “மக்கள் மத்தியில் போலீசார் மீது அவப்பெயரை ஏற்படுத்துவது போல இந்த காட்சி உள்ளது. முன்பு குற்றவாளிகள்  போலீஸ் மீது கை வைக்க தயங்குவார்கள்.
தற்போது இந்த மாதிரியான  படங்கள் இளைஞர்கள் மத்தியில் போலீசை தாக்க தூண்டி விடுகின்றன.
“புகையிலை, மது அருந்துதல் தவறு என படத்தில் வருவது போல போலீசாரை தாக்குவது தவறு என்று படத்தில் இடம்பெற வேண்டும்” என அந்த புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த புகாரை சமூகவலைத்தளங்களில் பொதுமக்கள் கேலி செய்து வருகிறார்கள்.
author avatar
murugan

Leave a Comment