ம.பி. அரசுக்கு சிக்கல் ! காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் ராஜினாமா

மத்திய பிரதேசத்தில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவிற்கும் கமல்நாத்திற்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இதற்கு இடையில் மத்தியபிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவை சந்தித்தார்.பின்னர் ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.இவரது ராஜினாமாவை காங்கிரஸ் கட்சியும் ஏற்றது.

இந்நிலையில்  மத்திய பிரதேசத்தில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.இதனால் காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 19 பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களின் பலம் 121-லிருந்து -102 ஆக குறைந்துள்ளது.  ஆட்சியமைக்க 105 எம்எல் ஏக்கள் தேவை என்ற நிலையில் பாஜக 106 எம்எல்ஏக்களை கொண்டு உள்ளது.எனவே அங்கு பாஜக ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.