எடியூரப்பா அமைச்சரவையில் 17 எம்எல்ஏக்கள் அமைச்சராக பதவியேற்பு!

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை

By murugan | Published: Aug 20, 2019 11:10 AM

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து.பாரத ஜனதா கட்சியை சார்ந்த எடியூரப்பா கர்நாடக  முதலமைச்சராக ஜூலை மாதம் பதவி ஏற்றார். ஆனால் அமைச்சர்கள் பதவி ஏற்காமல் இருந்தனர். ஏனென்றால் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவு மற்றும் கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அமைச்சர்கள் பதவி ஏற்காமல் இருந்தனர்.இது குறித்து டெல்லி சென்று இருந்த  முதலமைச்சர் எடியூரப்பா உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் ஆலோசித்து பேசினார். இந்நிலையில்  இன்று முதல் கட்டமாக எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அமைச்சரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் , கே.எஸ் ஈஸ்வரப்பா  , அசோகா ,சுரேஷ்குமார் மற்றும்  அஷ்வத் நாராயணன் ஆகிய  17 எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் வஜூபாய்வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  
Step2: Place in ads Display sections

unicc