162 ரன்னில் சுருண்ட தென்னாப்பிரிக்கா..! ஃபாலோ ஆன் கொடுத்த இந்தியா ..! 5 விக்கெட்டை இழந்து தடுமாறும் தென்னாப்பிரிக்கா..!

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையே 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில்  நடைபெற்று வருகிறது.

By murugan | Published: Oct 21, 2019 03:37 PM

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையே 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில்  நடைபெற்று வருகிறது. போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டை இழந்து 497 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதில் அதிகபட்சமாக ரோகித் சர்மா என் 212 ரன்களும் , ரஹானே 115 ரன்களும் எடுத்தனர். தென்னாபிரிக்கா அணி சார்பில் ஜார்ஜ் லிண்டே 4 விக்கெட்டுகளையும் , ரபாடா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது போதிய வெளிச்சம் இல்லாததால் போட்டி நிறுத்தப்பட்டது. அப்போது தென்னாப்பிரிக்கா அணி  5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. இதை தொடர்ந்து இன்று களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்கள் ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தனர். இதில் ஹம்சா 62 , பவுமா 32 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இந்திய அணி சார்பில் உமேஷ் 3 விக்கெட்டுகளையும் ,  முகமது சமி ,நதீம் மற்றும் ஜடேஜா   ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இதனால் இந்திய அணி 335 ரன்கள் முன்னிலையில் இருந்தது.இதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க அணி ஆட்டம் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. குவின்டன் டி காக் , கிளாசென் தலா 5 ரன்னும்  , ஹம்சா , பவுமா இருவரும் ரன்கள் எடுக்காமல் வெளியேறினர். தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 4 ரன்னில் விக்கெட்டை இழந்தார். தற்போது தென் ஆப்பிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டை இழந்து 40 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.இந்திய அணி சார்பில்  ஷமி 3  , உமேஷ் யாதவ் 2  விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc