பஞ்சாப் மாநிலத்தில் 162 பேர் உயிரிழப்பு.! 6,109 ஆக உயர்ந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை.!

கொரோனாவால் 5 பேர் உயிரிழந்ததை அடுத்து பஞ்சாப் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று, பஞ்சாப் மாநிலத்தில்  புதிதாக 172பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,109ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஐந்து பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது.

இறந்தவர்களில் இரண்டு ஆண்கள் மோகா மாவட்டமும், மொஹாலியை சேர்ந்த 69வயது பெண், அமிர்தசரஸை சேர்ந்த 25வயது ஆண், ஹோஷியார்பூரை சேர்ந்த 63வயது பெண் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பஞ்சாபில் 4306பேர் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 1614பேர் நிறுவன தனிமைப்படுத்தலிலும், அதில் 28பேர் ஆக்ஸிஜன் ஆதரவிலும், 3பேர் வென்டிலேட்டர் ஆதரவிலும் உள்ளதாக கூறப்படுகிறது.

பஞ்சாபில் லூதியானா மாவட்டத்தில் புதிதாக 46பேர் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து மொத்த எண்ணிக்கை 1000-ஐ தாண்டியது. அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஜலந்தர் முதலிடத்தில் உள்ளது. ஏனெனில் புதிதாக 61பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனை தொடர்ந்து லூதியானாவில் 46பேருக்கும்  மற்றும் சங்ரூரில் 16 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதனையடுத்து புதிதாக அமிர்தசரஸ் (9), பதிந்தா (6),தலா 5 பேர் வீதம் பர்னாலா, பெரோஸ்பூர் மற்றும் மொஹாலியிலும், பாட்டியாலா மற்றும் கபுர்தலாவில் தலா 3 பேர் வீதமும், மோகா, பதான்கோட் மற்றும் குர்தாஸ்பூரில் தலா 2 வீதமும், தலா 1 வீதம் தர்ன் தரன், நவான்ஷர், ஹோஷியார்பூர், பாசில்கா, ஃபதேஹ்ர்கர் சாஹிப், ரோப்பர் மற்றும் மான்சாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.