16,000 மணிநேரம் இணையம் முடக்கம்! 21,000 கோடி ரூபாய் இழப்பு!

  • இணையம் முடக்கபடுவதால் அதிகம் இழப்பை சந்தித்த நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
  • அதிலும், இ-காமர்ஸ் மற்றும் டெலிகாம் ஆகிய துறைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு துறைகளில் இணையம் மூலம் செய்யப்படும் வர்த்தகமானது இணையம் முடக்கப்படும் போது அதிக இழப்பை சந்திக்கின்றன. அப்படி இணையத்தால் அதிகம் இழப்பை சந்தித்த நாடுகளில் இந்தியா முதலிடம் வகித்து வருகிறது. இந்த தகவலை Indian Council for Research on International Relations என்கிற அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதில், இணையத்தால் அதிகம் பாதிக்கப்படும் துறைகளில் முக்கியமானது இ-காமர்ஸ் மற்றும் டெலிகாம் துறைகளில் அதிகம் பாதிக்கப்படுகிறதாம். இவைகள் முறையே ஒரு மணி நேர இணைய முடக்கத்திற்கு 3.67 கோடி மற்றும் 2.45 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறதாம்.

இந்த இழப்பு 2018இல் 134 மணி நேரமாக இருந்துள்ளது. அதே போல 2019ஆம் ஆண்டு 104 மணிநேரம் இருந்துள்ளது. 2012 முதல் 2017 வரை 5 ஆண்டுகளில் மொத்தம் 16 ஆயிரம் மணி நேரத்தில், 21 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு இந்தியாவில் ஏற்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.