ஒரு நாளுக்கு 150 கி.மீ.! கொத்துக்கொத்தாக படையெடுக்கும் வெட்டுக்கிளி கூட்டம்.!

ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் சுமார் 15 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கொத்துக்கொத்தாக படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள் பல்வேறு மாவட்டங்களில் உள்ள விளை பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. ஜெய்ப்பூரில் இருந்து தவுசா பகுதியை நோக்கி படையெடுக்கும் வெட்டுக்கிளிகளின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்திலும் வெட்டுக்கிளிகள் விளை பயிர்களை பதம் பார்த்து வருகின்றன.

ஒரு நாளுக்கு 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்கும் தன்மைகொண்ட வெட்டுக்கிளிகள் கூட்டமாக சேர்ந்து விளை பயிர்களை அளிக்கும் தன்மை கொண்டவை. 26 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் ராஜஸ்தானில் சுமார் 7 லட்சம் ஏக்கர் ஹெக்டேர் விளை பயிர்கள் சேதமானதாக கூறப்படும் நிலையில், தற்போது மீண்டும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்