கர்நாடகா: பாஜகவில் இணைந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்கள்..!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 17 எம்.எல்.ஏக்கள் பாஜகவிற்காக ஆதரவு கொடுத்ததாக சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தார்.
தங்களது தகுதி நீக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கின் விசாரணை நேற்று உச்சநீதிமன்றம் வழங்கியது.அதில் சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் கூறியது.
மேலும் கர்நாடக மாநிலத்தில் வருகின்ற டிசம்பர் 05-ம் தேதி இடைத்தேர்தல் என அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில்  தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் போட்டியிடலாம் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.
இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்களும் பாஜகவில் இணைய உள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா நேற்று கூறினார்.அதன் படி தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்கள் இன்று காலை எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தனர்.இரண்டு எம்.எல்.ஏக்கள் இன்னும் பாஜகவில் இணையவில்லை என என்பது குறிப்பிடத்தக்கது.
 

author avatar
murugan