நிர்பயா போல் 12 வயது சிறுமி வன்கொடுமை..முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இழப்பீடு.!

டெல்லியில் நிர்பயா போன்று கொடுமைகளை அனுபவித்த 12 வயது சிறுமி.

டெல்லி விஹார் பகுதியில் தனது வீட்டில் இருந்த  12 வயது சிறுமி அடையாளம் தெரியாத நபரால் கடுமையாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்த வழக்கு தொடர்பாக போலீசார்  ஒருவரை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்டவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வியாழக்கிழமை கூறினார். மேலும் அவர் கூறுகையில் குற்றவாளிகளை நீதிக்கு கொண்டு வர அரசாங்கம் சிறந்த வழக்கறிஞர்களை நியமிக்கும் என்றும் கூறினார்.

பாலியல் வன்கொடுமை தவிர, சிறுமியின் முகத்திலும் தலையிலும் கூர்மையான பொருளால் தாக்கப்பட்டுள்ளார் என்றும்  சிறுமியின் அந்தரங்க இடத்தில் கத்தரிக்கோலால் குத்தப்பட்டதால், பிறப்புறுப்பு மற்றும்  குடல்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டார் அவர்  33 வயதான கிருஷ்ணா என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் மீது ஏற்கனவே கொலை வழக்குகள் உள்ளன என்று போலீசார் தெரிவித்தனர். அவர் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டிற்குள் நுழைந்ததாக போலீசார் தெரிவித்தன.

இந்நிலையில் இன்று மருத்துவமனைக்கு சென்று சிறுமியின் நலம் விசாரித்த முதல்வர் அப்போது செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், பாதிக்கப்பட்டவர் இன்னும் தனது உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ளார் இந்நிலையில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு  ரூ .10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.