12 :ராசிகாரர்களுக்கும் இன்றைய ராசி பலன்..!!

இன்றைய நாள் மேஷ ராசிகாரர்களுக்கு :
 

சோர்வு அகன்று சுறுசுறுப்பாகப் பணியாற்றும் நாள். இடமாற்றங்களால் இனிமை ஏற்படும். வழக்கத்தை விடக் கூடுதலான நேரம் பணிபுரிய நேரிடலாம். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடன்பிறப்புகள் உங்கள் தொழிலுக்கு உறுதுணைபுரிவர்.
இன்றைய நாள் ரிஷப ராசிகாரர்களுக்கு :

வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். வெளிநாட்டு முயற்சி கைகூடுதவற்கான அறிகுறி தென்படும். பழைய சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை வைப்பீர்கள்.
இன்றைய நாள் மிதுன ராசிகாரர்களுக்கு :

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களுக்கு மத்தியில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.

இன்றைய நாள் கடக ராசிகாரர்களுக்கு :
Related image

தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படும் நாள். கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதிப்பீர்கள். கிடைக்குமோ, கிடைக்காதோ என்று நினைத்த பொருள் எளிதில் கிடைக்கும். பயணம் பலன் தரும்.

இன்றைய நாள் சிம்ம ராசிகாரர்களுக்கு :
Image result for mesa rasi images
குழப்பங்கள் தீரும் நாள். கொடுக்கல்– வாங்கல்கள் ஒழுங்காகும். ஆரோக்கியத் தொல்லை அகலும். தொழில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. மறதியால் அவதிக்கு ஆளாக நேரிடும். வாகனம் வாங்கும் வாய்ப்பு கைகூடும்.

இன்றைய நாள் கன்னி ராசிகாரர்களுக்கு :
Image result for mesa rasi images

சந்தித்த நண்பர்களால் சந்தோ‌ஷம் கிடைக்கும் நாள். உறவினர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் உண்டு. தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வங்கிகள் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

Image result for mesa rasi images

ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள். அலைபேசி மூலம் எதிர்பார்த்த தகவல் வந்து சேரலாம். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். உடல் ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும்.

 

இன்றைய நாள் விருச்சிக ராசிகாரர்களுக்கு :
Related image

பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். திட்டமிட்ட பயணமொன்றைக் கடைசி நேரத்தில் மாற்றியமைப்பீர்கள். விரயங்கள் கூடும். ஆலய வழிபாடு ஆனந்தம் வழங்கும்.

இன்றைய நாள் தனுசு ராசிகாரர்களுக்கு :
Image result for mesa rasi images

நல்ல செய்திகள் நாடி வந்து சேரும் நாள்.  பெற்றோர்கள் மீதான பாசம் அதிகரிக்கும் உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுப் பெறுவீர்கள். அன்னிய தேச அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா என்று சிந்திப்பீர்கள்.

இன்றைய நாள் மகர ராசிகாரர்களுக்கு :
Image result for mesa rasi images

காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். அரசு தொடர்பான காரியங்களில் எதிர்பார்த்த நற்பலன்கிடைக்கும். வரவு திருப்தி தரும்.

இன்றைய நாள் கும்ப ராசிகாரர்களுக்கு :
Image result for mesa rasi images

வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கைக் காப்பாற்றவீர்கள். செவிகுளிரும் செய்திகள் வந்து சேரும். வீடு, இடம் வாங்கப் போட்ட திட்டம் வெற்றி பெறும்.

இன்றைய நாள் மீன ராசிகாரர்களுக்கு :
Image result for mesa rasi images

சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும்.

author avatar
kavitha

Leave a Comment