2 நாட்களில் ஹெல்மெட் அணியாத 1,18,018 பேர் மீது வழக்குப்பதிவு -டிஜிபி அலுவலகம்

2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,18,018 பேர்   மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

By venu | Published: Sep 16, 2019 05:10 PM

2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,18,018 பேர்   மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் அமலுக்கு வந்தது .இந்த சட்டம் டெல்லியிலும் அமலுக்கு வந்தது.அன்று முதலே விதிகளை மீறுவோரிடம் பராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டிஜிபி அலுவலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 14 மற்றும் 15-ஆகிய தேதிகளில் சிறப்பு வாகன சோதனை நடைபெற்றது.கடந்த இரு நாட்களில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,18,018 பேர்   மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும்  நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற 36,835 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக 28 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
Step2: Place in ads Display sections

unicc