12-ம் வகுப்பு மாணவர்களை கத்தியால் குத்திய 10-ம் வகுப்பு மாணவன்!

10th Grade Student stabbed with knife!

தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கண்டமனூரில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் மதன்.அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் முல்லைவேந்தன், அஜய், ராகுல். இந்த இருதரப்பினருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் 10-ம் வகுப்பு மாணவன் படிக்கும் மாணவன் மதன்,12-ம் படிக்கும் மாணவர்களான முல்லைவேந்தன், அஜய், ராகுல் ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே தகராறு பெரிதாகவே ஆத்திரம் அடைந்த 10-ம் வகுப்பு மாணவன் மதன்,கத்தியால் மூன்று மாணவர்களையும் குத்தியுள்ளார்.பலத்த காயமடைந்த மாணவர்கள் தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக கண்டமனூா் காவல் துறையினா் வழக்கு தொடுத்து விசாரணை நடத்தி வருகின்றன.இந்நிலையில் மாணவர்களுக்கிடையே  தகராறு ஏற்படுவது வழக்கமான ஒன்று என்றாலும் மாணவன் ஒருவன் கத்தியுடன் தகராலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Madan is a 10th standard student at Kandhamanoor near Andipatti in Theni district. Madan, a student of 10th grade, has been involved in a dispute with Mullivendan, Ajay and Rahul. Madan, a 10th grade student who became so furious between the two, stabbed the three students with a knife. The incident is now being investigated by the Kandanamool Police Department.