10-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து! அவசரப்பட்ட மாணவி எடுத்த விபரீதமான முடிவு!

திருச்சியில் தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 10-ம் வகுப்பு மாணவி.

திருச்சி மாவட்டம், மணப்பாறை சின்ன சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் உதயதர்ஷினி. இவர் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஏற்கனவே தேர்வுகள் நடைபெறும் என்று , அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான ஹால் டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வாங்கி விட்டு வீடு வந்த உதய தர்சினி, மனமுடைந்த நிலையில் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்துள்ளார். 

இந்நிலையில், உதயதர்ஷினி தேர்வு பயத்தால், அன்று இரவே வீட்டிற்குள் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 10-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.