பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 10வது பட்ஜெட் யாருக்கும் 'பத்தாத பட்ஜெட்'-மு.க.ஸ்டாலின்

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 10வது பட்ஜெட் யாருக்கும் 'பத்தாத

By venu | Published: Feb 14, 2020 02:03 PM

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 10வது பட்ஜெட் யாருக்கும் 'பத்தாத பட்ஜெட்' என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக தாக்கல் செய்தார்.இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,நிதியமைச்சர் பன்னீர்செல்வத்தின் 10வது பட்ஜெட் எதற்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது.குறிப்பிட்ட சில அமைச்சர்களின் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அதிமுக ஆட்சியில் கடன் தொகை 3 மடங்கு உயர்ந்துள்ளது.பட்ஜெட்டில் தொலைநோக்கு, வளர்ச்சி திட்டங்கள் இல்லை. மத்திய அரசை தமிழக அரசு எப்படி பின்பற்றுகிறது என்பதற்கு பட்ஜெட் உரை சாட்சி என்று தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc