அதிர்ச்சி..பிளஸ்-2 மற்றும் 10ம் வகுப்பு வினாத்தாள் லீக்...பின் பரீச்சை எதற்கு..?கிழித்தெடுக்கும் கேள்விகள்

  • பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் +2 மாணவர்களின் வினாத்தாள் வெளியாகியுள்ளது

By Fahad | Published: Apr 02 2020 07:02 PM

  • பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் +2 மாணவர்களின் வினாத்தாள் வெளியாகியுள்ளது இதனால் கல்வி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
  • வினாத்தாள் வெளியானதால் மாணவர்கள் மகிழ்ச்சி-பின் ஏன் பரிச்சை என்று கிழித்தெடுக்கும் பொதுமக்கள். 
பொதுத்தேர்வு எழுதும் +2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கான திருப்பதல் தேர்வுகள் என்று சொல்லப்படும் முதல் ரிவிசன் டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தான் இந்த வினாத்தாள்கள் சமூகவலைதலங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனே அரையாண்டு தேர்வின் போது 9,10,மற்றும்+1,+2 ஆகிய வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு  வினாத்தாள்கள் தேர்விற்கு முன்பே சமூகவலைதலங்களில் வெளியாகியது.இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் மேலும் தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்த நிலையில் தற்போது தி கணிதம்,அறிவியல் பாடவினாத்தாள்கள் வெளியாகி உள்ளது. கணித தேர்வானது வரும் 13 தேதி +2க்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல் 10 வகுப்பிற்கு அறிவியல் மற்றும் கணித பாடத்திற்கான வினாத்தாள்களும் சமூகவலைதலங்களில் வெளியாகி உள்ளது.இவ்வாறு தேர்வு எழுதுவதற்கு முன்பே வினாத்தாள்கள் வெளியாகியதால் கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வினாத்தாள் வெளியாகியதை அடுத்து அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். வினாத்தாள்கள் இவ்வாறு தேர்விற்கு முன்னர் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தால் பின்னர் எதற்கு தேர்வு வினாத்தாள்களை மாணவர்களின் கையிலே கொடுத்து தேர்வு எழுத வைக்கலாமே என்று பொதுமக்கள் வசைபாடுகின்றனர்.