எய்ட்ஸ் நோயால் 10 லட்சம் பேர் மரணம் ஐ.நா., அதிர்ச்சி தகவல்..,

பாரீஸ்: 2016 ஆண்டில் மட்டும் எய்ட்ஸ் நோய்க்கு 10 லட்சம் பேர் பலியாகியுள்ளனர் என ஐ.நா தெரிவிதுள்ளது. உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயின் தாக்கம் குறித்து ஐநா ஆய்வு நடத்தியது. இதன் முடிவுகள் சமீபத்தில் எய்ட்ஸ் நோய் தொடர்பான கருத்தரங்கில் ஐநா வெயிட்டது. அதில் கடந்த 2016 ஆண்டில் மட்டும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 10 லட்சம் பேர் மரணடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2005ல் 19 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் பாதிக்கப்பட்ட 3.65 கோடி பேரில், 1.95 கோடி பேர் எய்ட்ஸ் நோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கடந்த ஆண்டு எய்ட்ஸ் நோயால் 18 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 1997 ல் 35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது உலகம் முழுதும் 7.61 கோடி பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயால் தற்போது வரை 35 கோடி பேர் மரணமடைந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எய்ட்ஸ் நோய் பற்றிய  விழிப்புணர்வு அனைத்து நாட்டு மக்களிடையே சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டும்  என்றும் கேட்டுக்கொண்டுளது.

author avatar
Castro Murugan

Leave a Comment