100 வயதான தனது தாயை கட்டிலோடு வங்கிக்கு இழுத்து சென்ற மகள்.!

ஒடிசா மாநிலத்தில்  100 வயதான தனது அம்மாவை கட்டிலோடு வங்கிக்கு இழுத்து சென்ற சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கொரனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பல்வேறு ஏழைகள் தொழிலுக்கு செல்லாமல் வறுமையில் இருக்கிறார்கள், இதை கருத்தில் கொண்ட பிரதமர் பெண்களின் ஜன்தன் வாங்கி கணக்கில் மாதம் தலா ரூ. 500 என்று மத்திய அரசு அறிவிக்கப்பட்டது. அந்த உதவி தொகை பெற்றவர்களில் ஒருவர்  ஒடிசா மாநிலத்தில் பர்கோன் கிராமத்தை சேர்ந்த 100 வயதுக்குமேல் ஆன மூதாட்டி லாபே பாகல்,  இவர் தனது வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கிறார், மேலும் வீட்டில் இருக்கும் இவர்  இவரது வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருக்கும் பணத்தை பெற்று வர முடியவில்லை .

மேலும் இந்த நிலையில் இவருடைய மகள் புன்ஜிமாதி தேய் செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் கடந்த 9ம் தேதி தங்கள் கிராமத்தில் உள்ள கிராம வங்கிக்கு சென்று மானேஜரை சந்தித்து தனது தயார் இருக்கும் நிலையை விளக்கிக் கூறி தனது தாய் வரமுடியாத நிலையில் இருப்பதால் அவரது வங்கி கணக்கில் உள்ள 1500 ரூபாய் வழங்குமாறு கேட்டுள்ளார்.

இதற்கு மானேஜர் உங்கள் தாய் வங்கி வைத்திருக்கும் கணக்கை வைத்திருக்கும் உங்கள் தாயாரை நேரில் அழைத்து வந்தால் மட்டுமே பணத்தை வழங்க முடியும் என்றே கூறியுள்ளார், மேலும் இதனால் ஏமாற்றமடைந்த புன்ஜிமாதி தேய் சோகத்துடன் வீடு திரும்பினார். மேலும் புன்ஜிமாதி தேய் பணத்தேவை நெருங்கியதால் தனது தாயை வங்கிக்கு கூப்பிட்டு செல்ல முடிவு செய்தார், ஆனால் வாகன வசதி எதுவும் கிடைக்கவில்லை இதனால் கட்டிலில் எலும்பு தோலுமாக கிடந்த தனது தாயை அவர் படுத்திருந்த கட்டிலில் கயிறு கட்டி வெயிலில் இழுத்து சென்றுள்ளார்.

இதனை பொதுமக்கள் பரிதாபமாக பார்த்து சிலர் புகைப்படம் எடுத்து இணையதளத்திலும் வெளியிட்டனர், இதை பற்றி புன்ஜிமாதி தேய் கூறியது ” எனக்கு வேறு வழி தெரியவில்லை அதனால் தான் என்னுடைய தாயை கட்டிலில் கயிறு கட்டி இழுத்து சென்றேன் அதற்கு பிறகுதான் எனக்கு பணம் கிடைத்தது என்றும் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.